முத்தையா முரளிதரன் ஒரு நஞ்சு விளங்கி கொண்டு வெளியே வந்து விடுங்கள் விஜய் சேதுபதி!

முத்தையா முரளிதரன் ஒரு நஞ்சு விளங்கி கொண்டு வெளியே வந்து விடுங்கள் விஜய் சேதுபதி!

 

முத்தையா முரளிதரன் ஒரு நஞ்சு விளங்கி கொண்டு வெளியே வந்து விடுங்கள் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதிக்கு,
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு தென்னிந்திய தமிழ் சினிமாவில் உருவாக இருப்பதாகவும், அந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரனின் வேடத்தில் நீங்கள் நடிக்கப்போவதாகவும் ஏறத்தாள இருவருடங்களின் முன் தமிழ் சினிமா உலகில் ஒரு செய்தி வெளியானது.
வெளியான அதே வேகத்தில் அந்த செய்தி உண்மையானால் அதில் நீங்கள் நடிக்க கூடாது என தமிழர்களிடத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த செய்தி பேசப்படாது மறைந்து போனது.
ஆனால் இந்த வாரம் Dar motion pictures என்கின்ற திரைப்பட நிறுவனம் 800 என்கிற பெயரில் முத்தையா முரளிதரனின் வாழக்கை வரலாற்றை தாங்கள் திரைப்படமாக எடுக்க போவதாகவும், முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதியாகிய நீங்கள் நடிக்க போவதாகவும், இந்த மாதம் 13ம் திகதி திரைப்பட வேலைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதாகவும் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர்கள் அறிவித்த கணத்திலிருந்து தமிழர்களில் அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் எதிர்பலைகள் எழுந்தன.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழர்களும் தமது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.
கூடவே தமிழ்த்தேசியகட்சிகள், அமைப்புக்கள் அவற்றின் தலைவர்கள் தொண்டர்கள்,
எழுத்தாளர்கள்,கலைஞர்கள்,
கல்விமான்கள் என அனைத்து தரப்பட்டவர்களும் முத்தையா முரளிதரனாக நீங்கள் நடிக்க கூடாது- ஏன் நடிக்க கூடாது என்பதை தமக்கு தமக்கு தெரிந்தவற்றை எல்லாம் தெரியப்படுத்தி அறிவுறித்தினார்கள் .
அவ்வாறிருந்தும் குறித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தபடி 13/10/20 அன்று 800 திரைப்படத்தின் முதல்பார்வையை (First look) வெளியிட்டது.
தாம் வளர்த்துவிட்ட நடிகன் தமது உணர்விற்கு மதிப்பளிக்கவில்லை என்ற ஆதங்கத்திற்கும் அப்பால்
ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் வெறுப்பிற்கும், அருவருப்பிற்கும், இன அழிப்பின் கோரத்திற்கும் அடையாளமாய் விளங்கும் சிங்க கொடி தாங்கிய மேலங்கியுடன் வெளியிடப்பட்டிருக்கும் முத்தையா முரளிதரனாகிய உங்களின் தோற்றம் தமிழர்களை சினங்கொள்ள வைத்திருக்கின்றது.
இந்த இடத்திலே நாம்தமிழர் கட்சி சர்வதேச கடமைப்பினராகிய நாங்கள் உங்களுக்கு சிலவற்றை சொல்லவும் எச்சரிக்கவும் விளைகின்றோம்.

“ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு”
அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு விழுந்தாலும் அந்த பாலை பயன்படுத்த முடியாது.
அதேபோலத்தான்
முத்தையா முரளிதரன் தமிழனாக இருக்கலாம், ஆற்றல் மிகுந்த விளையாட்டு வீரனாக இருக்கலாம்
ஆனாலும் அவர் நல்ல மனிதராக நேற்றும் இல்லை, இன்றும் இல்லை.
சொந்த இனம் அழிந்ததை அழிவதை எதிர்க்காதவர்,ஏற்று கொள்கின்றவர்.
தமிழீழ விடுதலை போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலை புலிகளை ஏற்காதவர், எதிர்ப்பவர்.
இனப்படுகொலை புரிந்த போர்குற்றவாளிகளான இராயபக்ச குடுப்பதவர்களை எதிர்க்காதவர், ஏற்று கொள்பவர் இன்னொருபடி மேலாக அவர்களை சர்வதேச அரங்கில் மேன்மைப்படுத்த அனுதினமும் உழைப்பவர்.
இப்படியான கீழ்த்தரமான, மனித மாண்புக்கு விரோதமான வினோதமான மனிதரின் வாழக்கையை
அல்லது அவரின் வாழ்வின் எதோ ஒரு பகுதியை ஏன் வாழ்வின் ஒரு சம்பவத்தை கூட தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எட்டு கோடி தமிழர்கள் வாழும் இந்திய திருநாட்டின் எந்த ஒரு மூலையிலும் ஆவணப்படுத்த தமிழர்கள் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
இலங்கை தவிர உலகில் தமிழர்கள் வாழும் எந்த ஒரு தேசத்திலாயினும் முரளிதரனை மட்டுமின்றி தமிழின விரோதிகளை,தமிழீழ இனப்படுகொலையாளர்களை அந்த படுகொலைக்கு துணை போனவர்களை மேன்மையானவர்களாக காட்ட எந்த முயற்சி எடுத்தாலும் அதை நாங்கள் எங்களின் இயலுமைக்கு அப்பால் சென்றும் தடுத்து நிறுத்துவோம்.
இதனை வலியுறுத்தி வரும் ஞாயிற்று கிழமை உலகம் தழுவி நாம்தமிழர் சர்வதேச கட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
விஜய் சேதுபதி அவர்களே,
இனியேனும் நம் உணர்வுக்கு மதிப்பளித்து 800 என்கின்ற இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக உடனடியாக அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு விலக தவறும் பட்சத்தில் நாம் நம் போராட்டங்களை விரிவுபடுத்துவோம்.
நீங்கள் வாழும் உங்களின் வீட்டை முற்றுகையிடுவோம்,நீங்கள் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு தளங்களை சுற்றிவளைப்போம்,
உங்கள் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளை கைப்பற்றுவோம்.
உலக தமிழர்கள் நம்மூடாய் உயர்ந்த உங்கள் வியாபாரத்தை உங்களின் திரைப்படங்களை புறக்கணிப்பதூடாய் வீழ்ச்சியடைய வைப்போம்.
தமிழ் திரையுலகிலிருந்து திரைப்படங்களிலிருந்து, உங்களை வெளியேற்ற வேலை செய்வோம்,சிறுக சிறுக சேர்த்த உங்கள் சினிமா விம்பத்தை அடித்து நொருக்குவோம்.
அனைத்திற்கும் அப்பால் ஒவ்வொரு தமிழர் மனங்களில் இருந்தும் உங்களை உங்கள் நினைவுகளை மீண்டும் நெருங்க முடியாதவாறு அன்னியப்படுத்துவோம்.

நன்றி

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

நாம்தமிழர் சர்வதேச கட்டமைப்பு

16/10/2020

 

வள்ளுவம் வலைக்காட்சி – Valluvam Valaikkaatchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *